Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கையின் ஆரம்பப் போட்டியான அயர்லாந்துக்கெதிரான போட்டியின்போது கெண்டைக்கால் பின்தசை காயத்துக்குள்ளான வனிது ஹசரங்க தொடரிலிருந்து விலகியுள்ளார்.
எம்.ஆர்.ஐ ஸ்கான் திங்கட்கிழமை (09) மேற்கொண்ட நிலையிலேயே இடது கெண்டைக்கால் பின்தசையில் மோசமான கிழிவொன்று வெளிப்பட்டது. இது முன்னைய கெண்டைக்கால் பின்தசை காயம் மீள ஏற்பட்டது போல இல்லாவிடினும் அதனுடன் தொடர்புடையதென நம்பப்படுகின்றது. காலில் பிரச்சினை உள்ளடங்கலாக சில ஆண்டுகளாக காயத்துடன் ஹசரங்க போராடுகின்றார்.
சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரரான டுஷான் ஹேமந்தவால் இலங்கைக் குழாமில் ஹசரங்க பிரதியிடப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
13 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
1 hours ago