Shanmugan Murugavel / 2024 ஜூன் 27 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
ட்ரினிடாட்டில் தற்போது முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தானுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே உலகக் கிண்ணத் தொடரொன்றின் இறுதிப் போட்டிக்கு முதலாவது தடவையாக தென்னாபிரிக்கா தகுதி பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, மார்கோ ஜன்சன் (3), ககிஸோ றபாடா (2), அன்றிச் நொர்கியா (2), தப்ரையாஸ் ஷம்சியிடம் (3) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 11.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 57 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, குயின்டன் டி கொக்கை பஸல்ஹக் பரூக்கியிடம் ஆரம்பத்திலேயே இழந்தபோதும் றீஸா ஹென்ட்றிக்ஸின் ஆட்டமிழக்காத 29 (25), அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரமின் ஆட்டமிழக்காத 23 (21) ஓட்டங்களோடு 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமேயிழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஜான்சன் தெரிவானார்.
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago