2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு, இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இலங்கைக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

மிர்புரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. 9.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ஓட்டங்களுடன் காணப்பட்ட இந்தியா, அதன் பின்னர் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், சிறப்பான ஓட்டத்தை இந்தியா பெறுவதைத் தடுக்க முடிந்திருக்கவில்லை.துடுப்பாட்டத்தில் அன்மொல்பிறீட் சிங் 72 (92), சப்ராஸ் கான் 59 (71), வொஷிங்டன் சுந்தர் 43 (45), அர்மான் ஜாபர் 29 (16) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் அசித பெர்ணான்டோ, 10 ஓவர்களில் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தவிர, லஹிரு குமார, திலான் நிமேஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

268 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே தடுமாறியதோடு, இறுதியில் 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 97 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. முதலாவது ஓவரிலேயே முதலாவது விக்கெட்டை இழந்த இலங்கை அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களுடன் தடுமாறியதோடு, அதனைத் தொடர்ந்து 4ஆவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதன் பின்னர் மீண்டும் விக்கெட்டுகளை இந்தது. துடுப்பாட்டத்தில் கமிந்து மென்டிஸ் 39 (67), ஷம்மு அஷான் 38 (49), விஷாட் றந்திக்க 28 (40) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மாயங் தகர் 3 விக்கெட்டுகளையும் அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, இந்தியா சார்பாகச் சிறப்பாகச் செயற்பட்ட அன்மொல்பிறீட் சிங் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .