Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.
தனது 2ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் விளையாடிய எவின் லூயிஸ், 48 பந்துகளில் சதத்தைக் குவித்தார். தவிர, ஜோன்சன் சார்ள்ஸ் 33 பந்துகளில் 79 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் ஜஸ்பிறிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
246 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஓர் ஓட்டத்தால் தோல்வியடைந்தது. இறுதி ஓவரில் 8 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், அந்த ஓவரை வீசிய டுவைன் பிராவோ, இறுதிப் பந்தில் 2 ஓட்டங்கள் பெற வேண்டுமென்ற நிலையை ஏற்படுத்தினார். எனினும், அந்தப் பந்தில் மகேந்திரசிங் டோணி ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றி கிடைத்தது.
துடுப்பாட்டத்தில் 46 பந்துகளில் சதம் குவித்த லோகேஷ் ராகுல், 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களைப் பெற்றார். தவிர ரோகித் ஷர்மா 28 பந்துகளில் 62 ஓட்டங்களையும் மகேந்திரசிங் டோணி 25 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டுவைன் பிராவோ, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, எவின் லூயிஸ் தெரிவானார்.
22 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
47 minute ago