2025 ஜூலை 02, புதன்கிழமை

இறுதிப் போட்டியில் கெனின், ஸ்வியாடெக்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான சோஃபியா கெனினும், போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் தகுதிபெற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் பெற்றா குவித்தோவாவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனின், 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் நாடியா பொடொரொஸ்காவை எதிர்கொண்ட இகா ஸ்வியாடெக், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .