Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
குவஹாத்தில் புதன்கிழமை (29) நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, அணித்தலைவி லோரா வொல்வார்ட்டின் 169 (143), தஸ்மின் பிறிட்ஸின் 45 (65), மரிஸனே கப்பின் 42 (33), சோல் டைரோனின் ஆட்டமிழக்காத 33 (26), நடினே டி கிளார்க்கின் ஆட்டமிழக்காத 11 (06) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது. சோபி எக்கிலஸ்டோன் 4, லோரன் பெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 320 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, கப் (5), அயபொங்கா ககா, சுனெ லுஸ், நொன்குலுலெக்கோ மலபா, டி கிளர்க்கிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களையே பெற்று 125 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அணித்தலைவி நட் ஷிவர்-ப்ரண்ட் 64 (76), அலைஸ் கப்சி 50 (71), டனி வையாட்-ஹொட்ஜ் 34 (31), லின்சே ஸ்மித் 27 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகியாக வொல்வார்ட் தெரிவானார்.
4 minute ago
23 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
34 minute ago
40 minute ago