Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 10 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியனான ரஃபேல் நடாலும், உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சும் தகுதிபெற்றுள்ளனர்.
நேற்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மானை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 6-3, 6-3, 7-6 (7-0) என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில் உலகின் ஆறாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை எதிர்கொண்ட சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .