Shanmugan Murugavel / 2016 ஜூன் 08 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் குழாமில் இணைந்துகொள்ளும் வீரர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இக்குழாமில் நீண்ட காலத்துக்குப் பின்னர், பர்வீஸ் மஹ்ரூப் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கைக்காக 104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 22 டெஸ்ட் போட்டிகளிலும் 7 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய மஹ்ரூப், இறுதியாக 2012ஆம் ஆண்டே இலங்கைக்காக விளையாடியிருந்தார். இந்நிலையிலேயே, உள்ளூர்ப் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான பெறுபேறுகளைத் தொடர்ந்து, இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். ஏனைய வீரர்களாக தனுஷ்க குணதிலக, சீக்குகே பிரசன்ன, சுராஜ் ரந்தீவ், உபுல் தரங்க ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக, ஏற்கெனவே டெஸ்ட் குழாமுக்காக இங்கிலாந்துக்குச் சென்றுள்ள வீரர்களோடு, இவர்கள் இணைந்து கொள்வர். எனினும், டெஸ்ட் குழாமிலிருந்து யார் இலங்கைக்குத் திரும்புவர் என்பது தொடர்பான விவரத்தை, இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கவில்லை.
இவ்வீரர்களுக்கு மேலதிகமாக, இங்கிலாந்துக்குச் சென்று, 4 நாள் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் பங்குபெறும் இலங்கை 'ஏ" குழாம் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு குழாம்களின் தலைவராக, அஷன் பிரியஞ்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
4 நாள் குழாம்:
அஷன் பிரியஞ்சன், மஹேல உடவத்த, உதார ஜயசுந்தர, மாதவ வர்ணபுர, நிரோஷன் டிக்வெல்ல, றொஷென் சில்வா, அஞ்சலோ பெரேரா, மினோட் பானுக்க, சரித் அசலங்க, சச்சித் பத்திரண, லஹிரு கமகே, கசுன் ரஜித்த, விஷ்வ பெர்ணான்டோ, அசித்த பெர்ணான்டோ, றமித் றம்புக்வெல்ல, பிரபாத் ஜயசுந்தர.
ஒருநாள் குழாம்:
அஷன் பிரியஞ்சன், மஹேல உடவத்த, உதார ஜயசுந்தர, பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, கித்துருவன் வித்தானகே, அஞ்சலோ பெரேரா, மினோட் பானுக்க, சரித் அசலங்க, சச்சித் பத்திரண, திஸர பெரேரா, லஹிரு பெரேரா, கசுன் ரஜித்த, மொஹமட் டில்ஷான், அசித்த பெர்ணான்டோ, றமித் றம்புக்வெல்ல, லக்ஷன் சந்தேகன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .