Shanmugan Murugavel / 2015 நவம்பர் 08 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்றுநர் ஜெரோம் ஜயரத்னவின் பதவி, நீடிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஜயரத்னவின் பதவி, டிசெம்பரிலும் ஜனவரியிலும் இடம்பெறவுள்ள நியூசிலாந்துத் தொடர்வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதற்கிடையில், புதிய பயிற்றுநரைக் கண்டுபிடிப்பற்கு, இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்த்திருந்தது.
எனினும், இலங்கை அணியின் அண்மைக்கால சிறப்பான பெறுபேறுகளும், அவர் மீது இலங்கை வீரர்கள் வெளிப்படுத்தியுள்ள சிறப்பான கருத்துகளும், அவரின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து, இலங்கை கிரிக்கெட் சபை கவனம் செலுத்தி வருகின்றது.
இதன்படி, அடுத்தாண்டு மார்ச்சில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடர்வரை, அவரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற போட்டியில்; முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, மார்லன் சாமுவேல்ஸின் ஆட்டமிழக்காத 110 ஓட்டங்களின் துணையோடு, 36 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற, 36 ஓவர்களில் 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய போது, 32.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டதையடுத்து, இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அப்போட்டியின் நாயகனாக மார்லன் சாமுவேல்ஸூம், தொடரின் நாயகனாக குசால் பெரேராவும் தெரிவாகினர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026