2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்?

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 06 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர், நாளை  இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இழந்த இலங்கை அணி, தான் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இருபதுக்கு-20 போட்டிகளிலாவது வெற்றிபெற எதிர்பார்த்துள்ளது.

நாளைய போட்டியில், நியூசிலாந்தின் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடரில் இலங்கைக்குத் தலையிடியாக அமைந்த மற் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இலங்கை சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இலங்கை: திலகரட்ண டில்ஷான், தனுஷ்க குணதிலக, டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, சாமர கப்புகெதர, திஸர பெரேரா, நுவான் குலசேகர, சச்சித்திர சேனநாயக்க, துஷ்மந்த சமீர, ஜெப்றி வன்டர்சே

நியூசிலாந்து: கேன் வில்லியம்ஸன், மார்ட்டின் கப்டில், றொஸ் டெய்லர், கொரே அன்டர்சன், கொலின் முன்றோ, மிற்சல் சான்ட்னெர், லூக் றொங்கி, அடம் மில்னி, ட்ரன்ட் போல்ட், மற் ஹென்றி, இஷ் சொதி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .