Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 23 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையில் இவ்வாண்டு இறுதியில் ஆரம்பிக்கவிருந்த தொடரில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடராகவே, இத்தொடர் அமையவுள்ளது.
இதில், முதலாவது டெஸ்ட் போட்டி, டிசெம்பர் 15-19 வரை, வொன்டரர்ஸில் இடம்பெறவிருந்தநிலையில், தற்போது அது, 3ஆவது போட்டியை ஜனவரி 12-16 வரை நடாத்தவுள்ளது. இதன்படி, போர்ட் எலிசபெத்தில், டிசெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த 2ஆவது டெஸ்ட் போட்டியே, முதலாவது போட்டியாக அமையவுள்ளது.
தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான ராம் ஸ்லாம் போட்டிகள், நவம்பர் 1 முதல் டிசெம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கேற்றவாறே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாண்டுக்கான ராம் ஸ்லாம் போட்டிகள், தென்னாபிரிக்க அணி, இந்தியாவில் காணப்பட்ட நேரத்தில் இடம்பெற்றதால், ஏபி டி வில்லியர்ஸ், ஹஷிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், கஜிஸ்கோ றபடா போன்ற முன்னணி வீரர்களால், ஒரு போட்டியில் கூட பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .