Editorial / 2018 ஜூலை 09 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அணியின் முகாமையாளராக கிரஹம் லெப்ரோய் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது, அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் பந்தினை மாற்றியமைத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதுத் தொடர்பில் நாளைய தினம் (10) சந்திமல், அணியின் பயிற்றுனர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த மூவருக்கும் ஆறு போட்டிகள் அல்லது ஒரு சில போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, புதிய பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026