2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கை – பங்களாதேஷ் தொடர் ஆரம்பிக்கின்றது

Shanmugan Murugavel   / 2021 மே 20 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரானது, டாக்காவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ODI-களுக்கான அணிகளின் தரவரிசையில் ஏழாமிடத்தில் பங்களாதேஷும், ஒன்பதாமிடத்தில் இலங்கையும் காணப்படுகின்ற நிலையில், 3-0 என பங்களாதேஷை இத்தொடரில் இலங்கை வெள்ளையடித்தால், தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இலங்கை முன்னேறுவதோடு, எட்டாமிடத்துக்கு பங்களாதேஷ் கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அணித்தலைவர் குஷல் பெரேரா, மீள் வருகையை மேற்கொண்ட குசல் மென்டிஸ் ஆகியோர் உன்னிப்பாக கவனிக்கப்படுவர் என்ற நிலையில், தனுஷ்க குணதிலக, வனிடு ஹஸரங்க ஆகியோர் இலங்கைக்கு முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.

மறுபக்கமாக, பங்களாதேஷ் சார்பில் தமிம் இக்பால், ஷகிக் அல் ஹஸன், முஷ்பிக்கூர் ரஹீம், மகமதுல்லாவிலேயே அவ்வணியின் பெறுபேறுகள் தங்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .