2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை ரசிகரை சந்தித்த இந்திய வீரர்கள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மாற்றுத் திறனாளியான  இலங்கை கிரிக்கெட் ரசிகரான கயான் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தொடர் தற்போது டுபாயில் இடம்பெற்று வருகின்றது. இதன்படி நேற்று முன்தினம் (28) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  போட்டி இடம்பெற்றிருந்தது.

 இந்த போட்டி இடம்பெற்று அடுத்த நாளான நேற்று (29) விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கயான் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

இதேவேளை, கயான் சேனாநாயக்க விராட் கோலியின் திருமண வரவேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X