2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கைக் குழாமில் கிண்ணியா ஜே.எம். றிப்கான் முகம்மட்

Shanmugan Murugavel   / 2021 மே 31 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எம்.ஏ. பரீட்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அடுத்தாண்டு உலகக் கிண்ணத் தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிய நாடுகளுக்கிடையிலான தகுதிகாண் போட்டிகளில், இலங்கை சார்பாக விளையாடுவதற்காக கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரி பழைய மாணவர் அக்ஸேரியன் விளையாட்டு வீரருமான ஜே.எம். றிப்கான் முகம்மட் தென்கொரியாவுக்கு செல்லவிருக்கிறார்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கொழும்பில் பொலிஸ் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வந்துள்ளார். இந்தாண்டு இலங்கை இராணுவ அணியில் இணைந்து விளையாடிக் கொண்டு வருகிறார்

இவர் இலங்கைக் குழாமில் தெரிவுசெய்யப்பட்ட 22 பேரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவரையும் இவரை பயிற்றுவித்த ஆசிரியர்களையும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப், எம்.எஸ். தௌபீக், கிண்ணியா அக்ஸேரியன் சுப்பர் லீக் நிர்வாகம், கிண்ணியா கால்பந்தாட்ட சம்மேளனம், உயர் அதிகாரிகள், பிரதேச மக்களும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .