2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெல்பேணில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கையணி சார்பாக துடுப்பாட்டவீரர்கள் கமில் மிஷாரவும், ஜனித் லியனகேயும் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, மத்தியூ வேட்டின் ஆட்டமிழக்காத 43 (27), கிளென் மக்ஸ்வெல்லின் 29 (21), ஜொஷ் இங்லிஷின் 23 (20), டேனியல் சாம்ஸின் 18 (15), மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் 17 (10) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், துஷ்மந்த சமீர 4-0-30-2, லஹிரு குமார 4-0-34-2, பிரவீன் ஜெயவிக்கிரம 4-0-29-1, சாமிக கருணாரத்ன 4-0-32-1, மஹேஷ் தீக்‌ஷன 4-0-27-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 155 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, குசல் மென்டிஸின் ஆட்டமிழக்காத 69 (58), அணித்தலைவர் தசுன் ஷானகவின் 35 (31), சரித் அஸலங்கவின் 20 (09), பதும் நிஸங்கவின் 13 (
08) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், கேன் றிச்சர்ட்ஸன் 3.4 -0-28-2, அஸ்தன் அகர் 4-0-19-1, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2-0-13-0, அடம் ஸாம்பா 4-0-33-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக மென்டிஸும், தொடரின் நாயகனாக மக்ஸ்வெல்லும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X