Editorial / 2024 ஜூலை 16 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடருக்கு பின் இந்திய அணி இலங்கை சென்று தலா 3 டி20, ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. ஜூலை 27ல் முதல் டி20 தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாள்களில் (27,28,29) மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. இதன்பின் ஓகஸ்ட் 2, 4, 7ம் திகதிகளில் 50 ஓவர் போட்டிகள் நடக்கவுள்ளன.
ரோகித் சர்மா டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் ஹர்திக் பாண்டியா இலங்கை செல்லும் இந்திய டி20 அணிக்கான கேப்டனாக செயல்படவுள்ளார்.
எனினும், ஹர்திக் பாண்டியா அதன்பின்னர் நடக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் விலகுகிறார் என்று அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago