2025 ஜூலை 19, சனிக்கிழமை

இலங்கைக்கு சவாலளிக்குமா அயர்லாந்து?

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 24 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது காலியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இனிங்ஸால் இலங்கை வென்ற நிலையில், இலங்கையணிக்கு சவாலளிப்பதற்கே அயர்லாந்து பலத்தளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக ஹரி டெக்டர், கேட்டிஸ் கம்பர், ஜோர்ஜ் டொக்ரல், லொர்கன் டக்கர் தவிர்ந்த ஏனையோர் நிலைத்து நின்று ஆட வேண்டியுள்ளது. இதேவேளை, மரே கொமின்ஸுக்குப் பதிலாக இப்போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் போல் ஸ்டேர்லிங்கும், அணித்தலைவர் அன்டி போல்பிரயனும் நீண்ட இனிங்ஸ்களை ஆட வேண்டியுள்ளது.

மறுப்பக்கமாக இலங்கையணியில் மாற்றமெதுவும் இருக்காது என நம்பப்படுகின்றபோது, ஆரம்பத் துடுப்பாட்டவீரர் இடத்தை நீண்ட காலத்துக்கு தனதாக்கிக் கொள்வதற்கு நிஷான் மதுஷ்க ஓட்டங்களைப் பெறுவது அவசியமாகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X