2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கெதிரான 2ஆவது டெஸ்டில் முன்னிலை பெற்றுள்ள மே. தீவுகள்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், அன்டிகுவாவில் கடந்த திங்கட்கிழமையிரவு ஆரம்பமான இந்த டெஸ்டின் மூன்றாம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு   ஆரம்பித்த இலங்கை, சிறிது நேரத்திலேயே தினேஷ் சந்திமாலை 44 ஓட்டங்களுடன் ஷனொன் கப்ரியலிடம் பறிகொடுத்ததுடன், பின்னர் 39 ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வாவையும் 39 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது.

இதைத் தொடர்ந்து பத்தும் நிஸங்க நிதானமாகத் துடுப்பெடுத்தாடியபோதும் மறுமுனையில் நிரோஷன் டிக்வெல்ல, துஷ்மந்த சமீரவை ஜேஸன் ஹோல்டரிடமும், சுரங்க லக்மாலை அல்ஸாரி ஜோசப்பிடமும் இலங்கை இழந்து தடுமாறுகிறது.

மழை காரணமாக நேற்று 42.1 ஓவர்களே சாத்தியமான நிலையில், மூன்றாம் நாள் முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்படுகிறது. களத்தில், தற்போது பத்தும் நிஸங்க 49, லசித் எம்புல்தெனிய ஓட்டமெதுவையும் பெறாமலுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .