2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் போராடும் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 27 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் போராடி வருகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் 508 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான், இன்றைய நான்காம் நாள் ஆட்டமானது போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு வரும்போது ஒரு விக்கெட்டை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், இமாம்-உல்-ஹக் 46 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் பாபர் அஸாம் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை பிரபாத் ஜெயசூரிய வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக தனஜ்சய டி சில்வானின் 109, அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் 61, ரமேஷ் மென்டிஸின் ஆட்டமிழக்காத 45, அஞ்சலோ மத்தியூஸின் 35 ஓட்டங்களோடு தமது இரண்டாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 360 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இலங்கை இடைநிறுத்தியிருந்தது. பந்துவீச்சில், நசீம் ஷா, மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், யசீர் ஷா, நெளமன் அலி, அக்ஹா சல்மான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்திருந்தனர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 378/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 80, நிரோஷன் டிக்வெல்ல 51, ஒஷாட பெர்ணாண்டோ 50, அஞ்சலோ மத்தியூஸ் 42, திமுத் கருணாரத்ன 40, ரமேஷ் மென்டிஸ் 35, தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 3/58, யசீர் ஷா 3/83, மொஹமட் நவாஸ் 2/80, நெளமன் அலி 1/64)

பாகிஸ்தான்: 231/10 (துடுப்பாட்டம்: அக்ஹா சல்மான் 62, இமாம்-உல்-ஹக் 32, யசீர் ஷா 26, ஹஸன் அலி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரமேஷ் மென்டிஸ் 5/47, பிரபாத் ஜெயசூரிய 3/80 தனஞ்சய டி சில்வா 1/15, அசித பெர்ணாண்டோ 1/62)

இலங்கை: 360/8 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 109, திமுத் கருணாரத்ன 61, ரமேஷ் மென்டிஸ் ஆ.இ 45, அஞ்சலோ மத்தியூஸ் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 2/44, மொஹமட் நவாஸ் 2/75, அக்ஹா சல்மான் 1/41, நெளமன் அலி 1/54, யசீர் ஷா 1/80)

பாகிஸ்தான்: 89/1 (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் ஆ.இ 46, பாபர் அஸாம் ஆ.இ 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 1/46)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X