2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமாக பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2022 மே 17 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் முடிவில் பலமான நிலையில் பங்களாதேஷ் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், சட்டோகிராமில் நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாளை விக்கெட் இழப்பின்றி தமது முதலாவது இனிங்ஸில் 76 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ், தமிம் இக்பால் மூலம் தொடர்ந்து ஓட்டங்களைக் குவித்தது.

இந்நிலையில், அசித பெர்ணாண்டோவிடம் 58 ஓட்டங்களுடன் மஹ்முடுல் ஹஸன் ஜோய் வீழ்ந்ததுடன், அடுத்து வந்த நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, அணித்தலைவர் மொமினுல் ஹக் ஆகியோர் வந்த வேகத்தில் கசுன் ராஜிதவிடம் வீழ்ந்தனர். தொடர்ந்து தமிம் இக்பாலும் 133 ஓட்டங்களுடன் உபாதை காரணமாக களத்தை விட்டு வெளியேறினார்.

அந்தவகையில் பங்களாதேஷ் தடுமாறியபோதும், முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸின் இணைப்பாட்டத்தால் மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்தது தமது முதலாவது இனிங்ஸில் 318 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், ரஹீம் 53, தாஸ் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 397/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 199, தினேஷ் சந்திமால் 66, குசல் மென்டிஸ் 54, ஒஷாத பெர்ணாண்டோ 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: நயீம் ஹஸன் 6/105, ஷகிப் அல் ஹஸன் 3/60, தஜியுல் இஸ்லாம் 1/107)

பங்களாதேஷ்: 318/3 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 133, மஹ்முடுல் ஹஸன் ஜோய் 58, லிட்டன் தாஸ் ஆ.இ 54, முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 53 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 2/17, அசித பெர்ணாண்டோ 1/55)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .