Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் முடிவில் முன்னிலையில் பங்களாதேஷ் காணப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் இன்று ஆரம்பமான இந்த டெஸ்டின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் மொமினுல் ஹக், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே சைஃப் ஹஸனை விஷ்வ பெர்ணான்டோவிடம் பறிகொடுத்தது.
எனினும், தமிம் இக்பால், அடுத்து வந்த நஜ்முல் ஹொஸைன் ஷன்டோவின் இணைப்பாட்டத்தில் பலமான நிலையிலிருந்த பங்களாதேஷ், 90 ஓட்டங்களுடன் தமிம் இக்பாலை விஷ்வ பெர்ணான்டோவிடம் பறிகொடுத்தது.
இதையடுத்து நஜ்முல் ஹொஸைன் ஷன்டோவுடன் இணைந்த மொமினுல் ஹக் இனிங்ஸை நகர்த்திய நிலையில், நேற்றைய முதலாம் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுள்ளது.
தற்போது களத்தில், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 126, மொமினுல் ஹக் 64 ஓட்டங்களுடனுள்ளனர்.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026