2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

இலங்கையணியின் முகாமையாளராக மொஹமட் ஆஷிக்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெறவுள்ள சுப்ரதோ கிண்ண சர்வதேச கால்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலை சிறுவர் அணியின் முகாமையாளராக கிண்ணியா கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் என்.ஜெ. முஹம்மட் ஆசிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆஷிக் தனது கல்லூரியில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் தன்னலமற்ற சேவையை ஆற்றி வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் கல்லூரி மாணவர்கள் பல தேசிய மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

இவை தவிர, 10-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. இவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .