Shanmugan Murugavel / 2021 மே 12 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) புதிய அணித்தலைவராக குஷல் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
இதேவேளை, ODI குழாமுக்கு மீளளழைக்கப்பட்டுள்ள குசல் மென்டிஸ், உப அணித்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னைய ODI அணித்தலைவர்களான திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
திமுத்தின் கீழ் அவருக்கு முந்தைய 18 மாதங்களுக்கு முன்னர் செயற்பட்டதை விட சிறப்பாக இலங்கை செயற்பட்டதுடன், மத்தியூஸும் அண்மைய ODIகளில் பெரும்பாலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்ததுடன், அவரின் களத்தடுப்பு, உடற்றகுதி மட்டங்களும் கடந்தாண்டு உயர்ந்திருந்தன.
இதேவேளை, இலங்கைக் குழாமுக்கு முதற்தடவையாக ஷிரான் பெர்ணான்டோ அழைக்கப்பட்டதுடன், சாமிக கருணாரத்ன, பினுர பெர்ணான்டோ ஆகியோர் ODI குழாம்களுக்கு முதற்தடவையாக அழைக்கப்பட்டுள்ளனர்.
குழாம்: குஷல் பெரேரா (அணித்தலைவர்), குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக, தனஞ்சய டி சில்வா, பதும் நிஸங்க, நிரோஷன் டிக்வெல்ல, அஷேன் பண்டார, தசுன் ஷானக, இசுரு உதான, ரமேஷ் மென்டிஸ், வனிடு ஹஸரங்க, சாமிக கருணாரத்ன, லக்ஷன் சந்தகான், அகில தனஞ்சய, அசித பெர்ணான்டோ, பினுர பெர்ணான்டோ, ஷிரான் பெர்ணான்டோ, டுஷ்மந்த சமீர.
1 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago