Shanmugan Murugavel / 2021 மே 10 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு பருவகாலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரொன்றுக்காக இலங்கைக்கு இந்தியா பயணமாகுமென்று, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் செளரவ் கங்குலி இனங்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், குறித்த தொடர் எப்போது நடைபெறுமென்பது இன்னும் தெளிவில்லாமலுள்ள நிலையில், இத்தொடரானது மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும், ஐந்து இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளையும் கொண்டிருக்குமென கங்குலி கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் எதிர்கால சுற்றுப்பயணங்கள் திட்டத்தின்படி, இவ்வாண்டு ஜூலை மாததில், இலங்கையில் மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா விளையாடுவதாகவுள்ளது. தவிர, இலங்கையில் கடந்தாண்டு ஜூன் மாதத்தில், மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இந்ந்தியா விளையாடுவதாக இருந்து, கொவிட்-19 பரவலால் குறித்த தொடர் இரத்தாகியிருந்தது.
இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் இரண்டாம் திகதி இந்தியா செல்லவுள்ளதுடன், இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி ஆரம்பிக்கும் முன்னர் தமக்கிடையே போட்டிகளை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், இலங்கைத் தொடரானது ஜூலை மாதத்தில் நடைபெறுமானால், வேறொரு குழாமையே இந்தியா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago