2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

இலங்கையை வீழ்த்துமா சிம்பாப்வே?

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது ஹராரேயில் வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அண்மைய காலங்களில் இலங்கை சிறப்பாகச் செயற்பட்டு வருகின்ற நிலையில், மோசமான பெறுபேறுகளை அண்மைய காலங்களில் கொண்டுள்ள சிம்பாப்வே எவ்வாறு சமாளிக்கப் போகின்றதென்பது சிக்கலானதாகவே காணப்படுகின்றது.

பிரெண்டன் டெய்லரின் மீள்வருகை சிம்பாப்வேக்கு பலம் சேர்த்தாலும் அவர், அணித்தலைவர் கிறேய்க் எர்வின், ஷோன் வில்லியம்ஸ், சிகண்டர் ராசா ஆகியோரிடமிருந்து பெரிய இனிங்ஸ்கள் கிடைக்கப் பெற்றாலே இலங்கைக்கு சிம்பாப்வே பிளஸிங்க் முஸர்பனி, காயத்திலிருந்து மீளத் திரும்பிய றிச்சர்ட் நகரவா மூலம் அழுத்தத்தைக் கொடுக்க முடியும்.

மறுப்பக்கமாக தொடர்ச்சியாக உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் குழாமில் வாய்ப்புப் பெற்றுள்ள நுவனிடு பெர்ணாண்டோ, பவன் ரத்னாயக்க ஆகியோரை பரிசோதிப்பதற்கான சிறந்த களமாக இத்தொடர் காணப்படுகிறது. தவிர குழாமுக்குத் திரும்பியுள்ள சதீர சமரவிக்கிரமவும் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .