2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

இலங்கையை வென்ற இந்தியா

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரானது குவஹாத்தியில் செவ்வாய்க்கிழமை (30) ஆரம்பித்த நிலையில், ஆரம்பப் போட்டியில் போட்டியை நடாத்தும் ஒரு நாடான இலங்கையை இன்னொரு போட்டியை நடாத்தும் நாடான இந்தியா வென்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, உதேஷிகா பிரபோதினி, இனோகா றணவீர (4), அணித்தலைவர் சாமரி அத்தப்பத்துவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 27 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களையே பெற்றுத் தடுமாறியிருந்தபோதும் தீப்தி ஷர்மாவின் 53 (53), அமன்ஜொட் கெளரின் 57 (56), ஸ்னே ரானாவின் ஆட்டமிழக்காத 28 (15) ஓட்டங்களோடு மழையால் 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது. முன்னதாக ஹர்லீன் தியோல் 48 (64), பிரதிகா றாவல் 37 (59) ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 47 ஓவர்களில் 271 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 45.4 ஓவர்களில் 211 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. சாமரி 43 (47), நிலக்‌ஷிகா சில்வா 35 (29), ஹர்ஷிதா சமரவிக்கிரம 29 (45) ஓட்டங்களைப் பெற்றனர். தீப்தி 3, ரானா 2, ஷ்றீ சரணி 2, பிரதிகா, கிரந்தி கோட், அமன்ஜொட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகியாக தீப்தி தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .