2025 மே 03, சனிக்கிழமை

இலங்கையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 27 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற இலங்கை தொடரை ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில், பல்லேகலவில் சனிக்கிழமை (26) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷே ஹோப் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிதானமான ஆரம்பத்தைப் பெற்ற நிலையில் 34 (50) ஓட்டங்களுடன் அவிஷ்க பெர்ணாண்டோவை றொஸ்டன் சேஸிடம் இழந்தது.

பின்னர் 17.2 ஓவர்களில் இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களைப் பெற்றபோது மழை குறுக்கிட்ட நிலையில் போட்டி 23 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் குசல் மென்டிஸ் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த நிலையில் 56 (62) ஓட்டங்களுடன் பதும் நிஸங்க ரண் அவுட்டானார். தொடர்ந்து வந்த அணித்தலைவர் சரித் அசலங்கவும் ஷெர்ஃபேர் ருதஃபோர்ட்டிடம் வீழ்ந்த நிலையில் 23 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 156 ஓட்டங்களை இலங்கை பெற்றது. குசல் ஆட்டமிழக்காமல் 56 (22) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பதிலுக்கு டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி 23 ஓவர்களில் 195 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் சிறிது நேரத்தில் அசித பெர்ணாண்டோவிடம் பிரண்டன் கிங்கை இழந்தது.

எவின் லூயிஸ் ஓட்டங்களைப் பெற்ற நிலையில் டில்ஷான் மதுஷங்கவை ஷே ஹோப்பிடம் இழந்தது. அடுத்து வந்த ருதஃபோர்ட்டின் ஆட்டமிழக்காத 50 (26), லூயிஸின் ஆட்டமிழக்காத 102 (61) ஓட்டங்களோடு 22 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக லூயிஸும், தொடரின் நாயகனாக அசலங்கவும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X