Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வென்ற நிலையில், தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் அவுஸ்திரேலியா உள்ளது.
கடந்த போட்டியில் விளையாடிய அடம் ஸாம்பா, ஸ்பென்ஸர் ஜோன்சன், கூப்பர் கொனோலி, ஜேக் பிறேஸர்-மக்குர்க், அலெக்ஸ் காரியை, தன்வீர் சங்கா, பென் டுவார்ஷுஸ், கிளென் மக்ஸ்வெல், ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ் ஆகியோர் பிரதியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையணியில் அவிஷ்க பெர்ணாண்டோவுக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க அல்லது நுவனிடு பெர்ணாண்டோ விளையாடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஆடுகளமானது வறட்சியாகவே காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 250 ஓட்டங்கள் வெற்றியை வழங்கக்கூடியதாக இருக்குமென நம்பப்படுகின்றது.
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago