2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

இலஞ்சக் குற்றச்சாட்டுகள்: பதவியிலிருந்து கென்ய அதிகாரி ஒதுங்கினார்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்கமருந்துக் குற்றச்சாட்டுகளில் சிக்கிய வீரர்களைக் காப்பாற்றுவதற்கு இலஞ்சம் கோரினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, கென்ய தடகள சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஐசாக் ம்வாங்கி, அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதற்காக, தனது பதவியிலிருந்து 21 நாட்கள் ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.

ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய இரண்டு வீரர்களான ஜோய் சகாரி, பிரான்ஸிஸ்கோ கோகி மனுவங்கா ஆகியோர், தங்களது தண்டனைகளைக் குறைப்பதற்கு, தங்களிடமிருந்து ஐசாக், தலா 24,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகக் கேட்டார் எனக் குற்றஞ்சாட்டியிருந்தனர். குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஐசாக், அவை வெறும் கட்டுக் கதைகள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே, தனது பதவியிலிருந்து ஒதுங்கும் விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 'எனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நான், எதிர்பார்ப்புடன் உள்ளேன்" என அவர் தெரிவித்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்கப்பட்டால், தனது பதவியில் அவர் மீளவும் வந்து இணைந்து கொள்வார் என, சம்மேளனத்தின் தலைவர் ஜக் டுவேர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .