2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இளைஞர் உலகக் கிண்ணம்: இலங்கை நீக்கம்

Janu   / 2023 நவம்பர் 21 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024  ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண (இளைஞர் உலகக் கிண்ணம்) போட்டியில் இருந்து இலங்கையை    நீக்கி தென்னாபிரிக்காவிற்கு வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் தீர்மானித்துள்ளது.

அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசேட மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், இலங்கை அணியை பங்குபற்றுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகத்தில் அரசியல் செல்வாக்கு செலுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் சங்கத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்த தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .