2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

ஈ.எஃப்.எல் கிண்ணம்: வெளியேற்றப்பட்டது யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எஃப்.எல்) கிண்ணத் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரின் தமது இரண்டாவது சுற்றுப் போட்டியில் நான்காம் தர அணியொன்றான கிறிம்ஸ்பி டெளணிடம் தோற்றே தொடரிலிருந்து யுனைட்டெட் வெளியேறியுள்ளது.

கிறிம்ஸ்பி டெளணின் மைதானத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற இப்போட்டியானது வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

யுனைட்டெட் சார்பாக பிறையன் புமு, ஹரி மக்குவாயா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கிறிம்ஸ்பி டெளண் சார்பாக சார்ள்ஸ் வெர்னம், தைரெல் வொரன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

பெனால்டியில் கிறிம்ஸ்பி டெளணின் ஒடோர் தவறவிட்டதுடன், யுனைட்டெட்டின் மதெயுஸ் குன்ஹாவும் தவறவிட்டார். இறுதியில் 13ஆவது பெனால்டியில் புமுவின் உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்ப 11-12 என்ற ரீதியில் தோற்று தொடரிலிருந்து யுனைட்டெட் வெளியேறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .