2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஈரானை வென்ற ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 30 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற ஈரான் உடனான குழு பி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஐக்கிய அமெரிக்கா, இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஐ. அமெரிக்கா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியன் புலிசிச் பெற்றிருந்தார். தொடரிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், மற்றைய குழு பி போட்டியில் வேல்ஸை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இங்கிலாந்து இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்குத் தகுதி பெற, வேல்ஸ் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது. இங்கிலாந்து சார்பாக மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, பில் பொடென் ஒரு கோலைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற கட்டாருடனான குழு ஏ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்ற நிலையில் அவ்வணி இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்குத் தகுதி பெற, கட்டார் தொடரிலிருந்து வெளியேறிருந்தது. நெதர்லாந்து சார்பாக, கோடி கக்போ, பிரெங்கி டி ஜொங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், மற்றைய குழு ஏ போட்டியில் ஈக்குவடோரை 2-1 என்ற கோல் கணக்கில் செனகல் வென்று இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்குத் தகுதி பெற, ஈக்குவடோர் தொடரிலிருந்து வெளியேறிருந்தது. செனகல் சார்பாக, இஸ்மைலா சர், கலிடு குலிபலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஈக்குவடோர் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொய்ஸன் கைசெடோ பெற்றிருந்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X