Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான உக்ரேனில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி தகுதிகாண் போட்டி ஒன்றில் நடப்புச் சம்பியன்களான போர்த்துக்கல் தோல்வியடைந்துள்ளது.
இப்போட்டியின் ஆறாவது நிமிடத்தில் உக்ரேனின் பின்களவீரர் செர்ஹி கிர்ய்ஸ்டொவ் கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டிய பந்தை போர்த்துக்கல்லின் கோல் காப்பாளர் றூயி பற்றிசியோ தட்டி விட்ட நிலையில், அதை உக்ரேனின் முன்களவீரரான றோமன் யரெம்சுக் கோலாக்கிய நிலையில் அவ்வணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இந்நிலையில், கோல் பெறுவதற்கான பல முயற்சிகளை இடது புறமாகவும், வலது புறமாகவும் மேற்கொண்டபோதும் போட்டியின் 27ஆவது நிமிடத்தில் உக்ரேனின் பின்களவீரரான விட்டாலி மைகொலெங்கோ வழங்கிய பந்தை அவ்வணியின் முன்களவீரரான அன்ட்றி யர்மொலெங்கோ கோலாக்கிய நிலையில் தமது முன்னிலையை உக்ரேன் இரட்டிப்பாக்கிக் கொண்டது.
அந்தவகையில், முதற்பாதி முடிவில் கோல் பெறும் சில வாய்ப்புகளை போர்த்துக்கல் தவறவிட்டிருந்தநிலையில், கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து அன்ட்றி யர்மொலெங்கோ கோல் கம்பத்துக்கு வெளியே உதைந்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது பாதியில் போர்த்துக்கல்லின் அணித்தலைவரும் நட்சத்திர முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சில கோல் பெறும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்த நிலையில், போர்த்துக்கல்லின் பெனால்டி பகுதிக்குள் வைத்து உக்ரேனின் மத்தியகளவீரர் தராஸ் ஸ்டெபனெங்கோ கையில் பந்து பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் போர்த்துக்கல்லுக்கு 72ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், குறித்த பெனால்டியை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கியபோதும், உக்ரேனின் கோல் காப்பாளர் அன்ட்றி பயோட்டொவ் சில சிறந்த தடுப்ப்புக்களை மேற்கொண்டதுடன், போட்டியின் இறுதி நிமிடங்களில் போர்த்துக்கல்லின் மத்தியகளவீரர் டனிலோ பெரைராவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருக்க இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் தோற்றது.
இந்நிலையில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள யூரோ கிண்ணத் தொடருக்கு உக்ரேன் தகுதிபெற்றுக் கொண்டது.
இதேவேளை, தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற துருக்கியுடனான குழு எச் போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் உலக சம்பியன்களான பிரான்ஸ் முடித்துக் கொண்டது. பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலிவர் ஜிரூட் பெற்றிருந்தார். துருக்கி சார்பாகப் பெறப்பட்ட கோலை கான் அய்ஹன் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பல்கேரியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியொன்றில் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றிருந்தது. இங்கிலாந்து சார்பாக, றொஸ் பார்க்லி, ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
குறித்த போட்டியானது இனத்துவவேஷக் கோஷங்கள் காரணமாக இரண்டு தடவைகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025