Shanmugan Murugavel / 2016 மார்ச் 02 , மு.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் அதிவேக நபரான உசைன் போல்ட்டின், 100 மீற்றர் ஓட்டத்துக்கான உலக சாதனைத் தூரத்தை விடக் குறைவான நேரத்தில், அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லின் ஓடியுள்ளார். எனினும் அது, உலக சாதனையாகக் கருதப்படாது.
பேர்ளினில் இடம்பெற்ற தடகளச் சங்கங்களுக்காக்கான சர்வதேசக் கூட்டமைப்பின் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் 9.58 செக்கன்களில் ஓடி, உசைன் போல்ட் சாதனை படைத்திருந்தார். அவரது சாதனை, முறியடிக்கப்படுவதற்குக் கடினமான ஒன்றாகக் காணப்படுகிறது.
இந்நிலையில், ஜப்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய ஜஸ்டின் கட்லின், 9.45 செக்கன்களில் ஓடி முடித்தார். ஆனால், அவர் ஓடும் போது, அவருக்குப் பின்னால், மணிக்கு 20 மைல் வேகத்தில் காற்று வீசும் உபகரணமொன்று வைக்கப்பட்டே, இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
சர்வதேச மட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காற்று அளவை விட 4 மடங்கு அதிகமான காற்றுக் காணப்பட்ட நிலையில், இது வெறுமனே தொலைக்காட்சிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது. எனினும் அங்கு கூடியிருந்தவர்கள், கட்லினின் 'சாதனை"ப் பாராட்டினர்.
27 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago