2025 ஜூலை 02, புதன்கிழமை

உலக கிண்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிற்றி, இன்டர்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 01 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிற்றி மற்றும் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் செவ்வாய்க்கிழமை (01) காலை நடைபெற்ற சவுதி அரேபியக் கழகமான அல்-ஹிலாலுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான சிற்றி வெளியேற்றப்பட்டுள்ளது.

சிற்றி சார்பாக பெர்ணார்டோ சில்வா, எர்லிங்க் ஹலான்ட், பில் பொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அல்-ஹிலால் சார்பாக மார்கோஸ் லியனார்டோ இரண்டு கோல்களையும், மல்கொம், கலிடு குலிபலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை பிரேஸிலியக் கழகமான புளூமினிஸிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றே இன்டர் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .