Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

காயங்கள் தொடர்பான சந்தேகங்கள் இருக்கின்றபோதும் பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், டிம் டேவிட் ஆகியோர் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியக் குழாமில் பெயரிடப்படவுள்ளனர்.
கமின்ஸின் முதுகுப் பகுதியில் 4 வாரங்களில் ஸ்கான் ஒன்று மேற்கொள்ளப்பட்டே உலகக் கிண்ணத்தில் விளையாடுவதா என்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
கெண்டைக்கால் பின்தசை காயம் காரணமாக பிக் பாஷில் இருந்து டேவிட் விலகியுள்ளபோதும் உலகக் கிண்ணம் ஆரம்பிக்கு முன்னர் பெப்ரவரி ஆரம்பத்துக்கிடையில் அவர் குணமடைந்து விடுவாரென கருதப்படுகிறது.
இதுதவிர கெண்டைக்கால் பின்தசை, கணுக்கால் காயங்களால் ஆஷஸை தவறவிட்ட ஹேசில்வூட்டும் உடற்றகுதியை அடைந்து விடுவாரென நம்பப்படுகின்றது.
இக்குழாமை உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு நெருங்கியதாக மாற்றலாமென்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
52 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
52 minute ago
3 hours ago