2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

உலகக் கிண்ண முடிவு: ’மெஸ்ஸி நேரத்தை எடுத்துக் கொள்வார்’

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி விளையாட மாட்டார் என்ற நிச்சயமற்றதன்மை அதிகரித்து வருகின்ற நிலையில், ஆர்ஜென்டீனாவின் அணித்தலைவர் மெஸ்ஸி இறுதி முடிவொன்றை எடுக்க முன்னர் அமைதியாக நேரத்தை எடுத்துக் கொள்வாரென அந்நாட்டின் முகாமையைளர் லியனல் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவில் தனது இறுதிப் போட்டியை வெனிசுவேலாவுக்கெதிரான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாடிய 38 வயதான மெஸ்ஸி, போட்டிக்கு பின்னர் உலகக் கிண்ணத்தில் தனது பங்கேற்பை உறுதியளிக்க மறுத்து விட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .