Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 21 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளார்.
ஜொவ்ரா ஆர்ச்சர் தவிர, லியம் டோஸன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோரும் உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னர் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக் குழாமிலிருந்த டேவிட் வில்லி, ஜோன் டென்லி, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை பிரதியிடுகின்றனர்.
இங்கிலாந்துக் குழாம்: ஒய்ன் மோர்கன் (அணித்தலைவர்), ஜேஸன் றோய், ஜொனி பெயார்ஸ்டோ (விக்கெட் காப்பாளர்), ஜேம்ஸ் வின்ஸ், ஜோ றூட், பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்), மொயின் அலி, அடில் ரஷீட், லியம் டோஸன், கிறிஸ் வோக்ஸ், லியம் பிளங்கெட், ஜொவ்ரா ஆர்ச்சர், டொம் கர்ரன், மார்க் வூட்.
இதேவேளை, உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் வஹாப் றியாஸ், மொஹமட் ஆமிர், ஆசிஃப் அலி ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். குழாமில் முன்னர் இருந்த ஃபாஹீம் அஷ்ரப், ஜுனைட் கான், அபிட் அலி ஆகியோரை இவர்கள் பிரதியிட்டிருந்தனர்.
பாகிஸ்தான் குழாம்: சஃப்ராஸ் அஹமட் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), ஃபக்கர் ஸமன், இமாம்-உல்-ஹக், பாபர் அஸாம், ஹரீஸ் சொஹைல், ஆசிஃப் அலி, ஷொய்ப் மலிக், மொஹமட் ஹபீஸ், இமாட் வசீம், ஷடாப் கான், ஹஸன் அலி, ஷகீன் ஷா அஃப்ரிடி, மொஹமட் ஆமிர், வஹாப் றியாஸ், மொஹமட் ஹஸ்னைன்.
இந்நிலையில், பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றுள்ள ஆசிஃப் அலியின் மகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தபோதும், உலகக் கிண்ணத் தொடரின்போது அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகக் கிண்ணத் தொடருக்கு தயார்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் வைத்துள்ள வீரர்களின் பட்டியலில், ஓய்வை அறிவித்துள்ள முன்னாள் அணித்தலைவர் டுவைன் பிராவோ, கெரான் பொலார்ட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago