Shanmugan Murugavel / 2021 நவம்பர் 09 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து, இடதுகாலின் பின்புற தசைநார் கிழிவு காரணமாக இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜேஸன் றோய் விலகியுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்துக் குழாமில் ஜேம்ஸ் வின்ஸால் றோய் பிரதியிடப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி சுப்பர் 12 போட்டியிலேயே றோய் காயமடைந்திருந்தார்.
இந்நிலையில், அணியில் றோயை சாம் பில்லிங்ஸ் பிரதியிடுவதுடன், ஜொனி பெயார்ஸ்டோ, டேவிட் மலான் ஆகிய ஒருவர் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுப்பக்கமாக, றோயை டேவிட் வில்லி அல்லது டொம் கர்ரன் பிரதியிடுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
25 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
50 minute ago