Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முதுகுப் பகுதி உபாதை காரணமாக அவுஸ்திரேலியாவின் பற் கமின்ஸ் விலகியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் இறுதி 15 பேர் கொண்ட குழாமில் பென் டுவார்ஷுஸ் அவரைப் பிரதியிட்டுள்ளார்.
இதேவேளை மத்தியூ ஷோர்ட் குழாமிலிருந்து நீக்கப்பட்டு மற் றென்ஷோ மூலம் பிரதியிடப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் குழாமில் இடம்பெறாதபோதும் காயமேதும் ஏற்பட்டால் பிரதியிடக்கூடியவர்களுள் காணப்படுகின்றார்.
குழாமில் பதில் விக்கெட் காப்பாளராக தொழில்முறைப் போட்டியொன்றிலும் விக்கெட் காப்பில் ஈடுபட்டிருக்காத கிளென் மக்ஸ்வெல்லே காணப்படுகின்ற நிலையில், பயிற்சியாளர் குழாமில் 2024 உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெற்ற பிக் பாஷ் லீக்கில் விளையாடுகின்ற மத்தியூ வேட் காணப்படுகிறார்.
குழாம்: மிற்செல் மாஷ் (அணித்தலைவர்), ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மற் றென்ஷோ, கமரன் கிறீன், டிம் டேவிட், கிளென் மக்ஸ்வெல், கூப்பர் கொனோலி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஜொஷ் ஹேசில்வூட், நாதன் எலிஸ், ஸ்கேவியர் பார்ட்லெட், பென் டுவார்ஷுஸ், அடம் ஸாம்பா, மற் கூனுமென்.
9 minute ago
25 minute ago
33 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
33 minute ago
56 minute ago