Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 19 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று அவுஸ்திரேலிய அணி இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதற்கமைய, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த உலக கிண்ண தொடரில் இந்திய அணி இதற்கு முன்னர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்றிருந்தாலும் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.
எனினும் அவுஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகவும் உலக கிண்ணத்தை வென்றுள்ளது.
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago