Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 10ஆவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் சனிக்கிழமை (07) நடைபெறவுள்ள பாகிஸ்தான், நெதர்லாந்துக்கிடையேயான போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இந்தியா மற்றும் இலங்கையில் இம்முறை நடைபெறும் தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்ற நிலையில், பாகிஸ்தான், நெதர்லாந்து தவிர நடப்புச் சம்பியன்கள் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, நமீபியா ஆகியன குழு ஏயில் இடம்பெற்றுள்ளன.
குழு பியில் அவுஸ்திரேலியா, இலங்கை, ஓமான், சிம்பாப்வே, அயர்லாந்து ஆகியன இடம்பெற்றுள்ளன. குழு சியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இத்தாலி, நேபாளம், ஸ்கொட்லாந்து ஆகியன இடம்பெற்றுள்ளன. குழு டியில் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு அணியும் குழுவிலுள்ள மற்றைய அணிகளுடன் விளையாடி ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சுப்பர் 8 சுற்றில் நான்கு அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களாக எட்டு அணிகள் பிரிக்கப்படும். பின்னர் இரண்டு குழுவிலும் ஒவ்வொரு அணியும் குழுவிலுள்ள மற்றைய அணிகளுடன் ஒரு தடவை விளையாடி முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இம்முறையும் கிண்ணத்தை இந்தியாவே வெல்வதற்கான வாய்ப்புகளே உள்ளபோதும் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகியனவும் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புகள் உள்ளனவாகக் காணப்படுவதுடன், பனிப்பொழிவு காரணமாக நாணயச் சுழற்சி முக்கியத்துவம் பெறுகையில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.
21 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago