Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற நமீபியாவுடனான குழு ஏ போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
நமீபியா: 96/10 (19.3 ஓவ. ) (பந்துவீச்சு: மஹேஷ் தீக்ஷன 3/25 [4], லஹிரு குமார 2/9 [3.3], வனிடு ஹஸரங்க 2/24 [4], சாமிக கருணாரத்ன 1/17 [4], துஷ்மந்த சமீர 1/19 [4])
இலங்கை: 100/3 (13.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பானுக ராஜபக்ஷ ஆ.இ 42 (27), அவிஷ்க பெர்ணான்டோ 30 (28) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: மஹேஷ் தீக்ஷன
இதேவேளை, மற்றைய குழு ஏ போட்டியில் நெதர்லாந்தை அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. அயர்லாந்தின் கேட்டிஸ் கம்பர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நமீபியாவும் நெதர்லாந்தும் மோதவுள்ளதுடன், இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் அயர்லாந்தும் இலங்கையும் மோதவுள்ளன.
57 minute ago
2 hours ago
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
25 Jan 2026