Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நாளை தொடரவுள்ளது.
மன்செஸ்டரில் இன்று ஆரம்பமான குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். நியூசிலாந்து சார்பாக டிம் செளதியை லொக்கி பெர்கியூசன் பிரதியிட்டதுடன், இந்திய அணியில் குல்தீப் யாதவ்வை யுஸ்வேந்திர சஹால் பிரதியிட்டிருந்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து, ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமாரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி ஆரம்பத்திலேயே தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மார்டின் கப்திலை பும்ராவிடம் இழந்தது.
தொடர்ந்து நியூசிலாந்தின் இனிங்ஸை மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஹென்றி நிக்கொல்ஸும், கேன் வில்லியம்சனும் கட்டமைக்க முயன்றபோது நிக்கொல்ஸை இரவீந்திர ஜடேஜாவிடம் பறிகொடுத்தது. இதையடுத்து, கேன் வில்லியம்சனும், றொஸ் டெய்லரும் இணைப்பாட்டத்தை கட்டமைத்த நிலையில் கேன் வில்லியம்சன் யுஸ்வேந்திர சஹாலிடம் வீழ்ந்ததுடன், தொடர்ந்து ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிரான்ட்ஹொம்மும் ஹர்டிக் பாண்டியா, புவ்னேஷ்வர் குமாரிடம் விழ 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
அந்தவகையில், இடைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்து போட்டி இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இன்றைய வானிலையும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாத நிலையில் போட்டியின் முடிவு பெறப்படாத சந்தர்ப்பத்தில், லீக் சுற்றுப் போட்டிகளில் நியூசிலாந்தை விட அதிக புள்ளிகளைப் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
நியூசிலாந்து: 211/5 (46.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 67 (85), கேன் வில்லியம்சன் 67 (95) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 1/25 [8], இரவீந்திர ஜடேஜா 1/34 [10], புவ்னேஷ்வர் குமார் 1/30 [8.1])
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago