Shanmugan Murugavel / 2015 நவம்பர் 12 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டமைப்பு ரீதியான ஊக்கமருந்து திட்டத்தில் ரஷ்யாவின் தடகள வீரர்கள் பங்கேற்றிருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடாத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
ஊக்கமருந்துக்கெதிரான நிறுவனங்களிடமிருந்து தொழில்முறையிலான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக மேலும் புட்டின் தெரிவித்தார். தவிர, போட்டிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த புட்டின், உண்மையாக இருக்கும் பட்சத்திலேயே விளையாட்டு போட்டிகள் சுவாரஷ்யமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பிரித்தானியாவின் ஊக்கமருந்துக்கெதிரான திட்டம் எந்தவொரு பெறுமதியற்றது எனவும், ரஷ்யாவினதை விட மோசமானது என ரஷ்யாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் விட்டாலி முட்கோ தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவை பாதிக்கும் விடயங்களை பற்றி மாத்திரம் பேசிய புட்டின், பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்குரிய பொறுப்பை எவராவது ஏற்க வேண்டும் எனக் கூறினார். விளையாட்டுக்களுடன் எவ்வகையிலும் தொடர்புடைய அதிகாரிகளை, இது பற்றி கவனமெடுக்குமாறு வினவியுள்ளதாக, சோச்சியில் வைத்து விளையாட்டு அதிகாரிகளுடன் சந்திக்க முன் புட்டின் தெரிவித்தார். உள்ளக விசாரணையை நடாத்துவது நாங்கள் நடத்துவது முக்கியம் என அவர் தெரிவித்தார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026