Shanmugan Murugavel / 2016 மார்ச் 02 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டு பெப்ரவரி மாதம், மகளொருவரைப் பெற்றதைத் தொடர்ந்து, முதன்முறையாகத் தந்தையாகியுள்ள பிரித்தானிய டென்னிஸ் வீரர் அன்டி மரே, தனது மகள் வளரும் போது, அவளது தந்தை குறித்து அவள் பெருமைப்பட வேண்டுமென எண்ணுவதாகத் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 7ஆம் திகதி தந்தையாகியமையைத் தொடர்ந்து, குழந்தையைப் பராமரிப்பது பற்றி அறிந்து வருவதாகத் தெரிவித்த அவர், முதல் சில நாட்களின் பின்னர், குழந்தையைப் பராமரிப்பது தொடர்பில் தன்னம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
டென்னிஸ் ஜாம்பவான்களான ரொஜர் பெடரர், நொவக் ஜோக்கோவிச் இருவருமே, தந்தையாகிய பின்னர் மேலும் சிறப்பாக விளையாடியிருந்த நிலையில், தனக்கு அது எவ்வாறு அமையுமெனத் தெரியவில்லையென அவர் தெரிவித்தார். 'சொல்வதற்கு அது கடினமானது. மீண்டும் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளேன், அது மோசமாக இருக்கவில்லை. பயிற்சிகளில் மிகவும் ஊக்கத்துடன் காணப்படுகிறேன். நொவக், ரொஜர் விடயத்தில் அது சிறப்பாகச் செயற்பட்டது. குழந்தைகள் பெற்றதால் அவர்கள் சிறப்பாக விளையாடினார்களா அல்லது அவர்கள் சாதாரணமாகவே சிறப்பானவர்களாக என்பது எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'போட்டியின் முடிவென்பது எல்லாமே கிடையாது. ஆனால், எனது மகள் வளரும் போது, நான் செய்தவற்றைப் பார்த்து, அவளது தந்தை குறித்து அவள் பெருமையடைய வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago