Shanmugan Murugavel / 2024 மே 20 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் இமோலாவில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற எமிலியா றொமக்னா குரான் பிறீயில் நெதர்லாந்தின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
பந்தயத்தை முதல்நிலையிலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் வென்ற நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த பிரித்தானியாவின் லான்டோ நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த மொனாக்கோவின் சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 161 புள்ளிகளுடன் நடப்புச் சம்பியனான வெர்ஸ்டப்பன் முதலிடத்தில் உள்ளார். 113 புள்ளிகளுடன் பெராரி அணியின் லெக்கலெர்க் இரண்டாமிடத்தில் உள்ளதுடன், மெக்ஸிக்கோவின் சேர்ஜியோ பெரேஸ் 107 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலுள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago