Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தனுஷ்க குணதிலகவின் ரண் அவுட்டானது சில விமர்சனங்களை ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் மீது ஏற்படுத்தியிருந்தது.
காலியின் இனிங்ஸின் சுரங்க லக்மால் வீசிய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தானது குணதிலகவின் காலில் பட்ட நிலையில் எல்.பி.டபிள்யூ கோரிக்கையை லக்மால் முன்வைத்த வண்ணம் இருந்தார்.
அப்போது வேண்டுமென்று இல்லா விட்டாலும் குணதிலக ஓட்டமெடுக்கும் பாதையில் லக்மால் வந்த நிலையில் இருவரும் மோதியிருந்தனர்.
அப்போது குணதிலக தடுமாறி ஓடிய நிலையில் பந்தை எடுத்த யாழ்ப்பாணத்தின் அணித்தலைவர் திஸர பெரேரா அவரை ரண் அவுட்டாக்கியிருந்தார்.
இந்நிலையில், ஆட்டமிழப்புக் கோரிக்கையை யாழ்ப்பாணம் திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
விதிகளின்படி இவ்வாட்டமிழப்பு செல்லுபடியானதென்றபோதும், கனவான் தன்மை கணக்கெடுக்கப்படவில்லை என ஆதங்கங்கள் எழுந்திருந்தன.
8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026