Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 22 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) இறுதிப் போட்டிக்கு ஜஃப்னா கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு நடைபெற்ற தம்புள்ள ஜையன்ட்ஸுடனான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஜையன்ட்ஸின் பதில் அணித்தலைவர் நிரோஷன் டிக்வெல்ல, கிங்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ், அவிஷ்க பெர்ணான்டோவின் 100 (64), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 70 (40), டொம் கொஹ்லர்-கட்மோரின் 15 (08), அணித்தலைவர் திஸர பெரேராவின் ஆட்டமிழக்காத 11 (07), ஷொய்ப் மலிக்கின் 06 (03) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இம்ரான் தாஹீர் 4-0-24-0, நுவான் பிரதீப் 4-0-30-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு, 211 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சார்பாக பில் ஸோல்ட் 22 (11), டிக்வெல்ல 18 (12), நஜிபுல்லா ஸட்ரான் 21 (15) என ஆரம்பங்களைப் பெற்றபோதும் சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 75 (47) ஓட்டங்களைப் போன்று எவரும் நிலைத்து நிற்காமல் குறிப்பிட்ட இடைவெளிகளில் சுரங்க லக்மால், மகேஷ் தீக்ஷன, ஜேடன் சியல்ஸ், பெரேரா, வனிடு ஹஸரங்கவிடம் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களையே பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், சியல்ஸ் 4-0-24-3, தீக்ஷன 4-0-23-2, ஹஸரங்க 4-0-32-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக பெர்ணான்டோ தெரிவானார்.
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago